‘ பணமற்ற பொருளாதாரம் ’ என்ற மோடியின் மோசடி


1968ல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், கணித துறை இயக்குனராக இருந்தவர், பேராசிரியர் பால் ஆர்மர். அவருடைய காலத்தில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை கிடையாது. அது பற்றிய கருத்துகள் அப்போதுதான் தோன்ற ஆரம்பித்திருந்தன. கணிதத்துறையை சேர்ந்தவர் என்பதற்காக பால் ஆர்மர் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, கடுமையாக எதிர்த்தார். காரணம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் ஏற்படப்போகிற ஆபத்துகளை, முன்கூட்டியே கணித்தார். நேரடி பண பரிவர்த்தனையை ஒழித்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மக்கள் மாறினால், ‘மனித அந்தரங்கம்’ என்ற ஒரு விஷயமே இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்தார். அவருடைய இறுதிக்காலம் வரை, பணமற்ற சமூகம் என்கிற கருத்தை எதிர்த்து போராடி வந்தார்.  பேராசிரியர் பால் ஆர்மரின் எச்சரிக்கையும் கணிப்பும் தற்போது உண்மையாகி உள்ளது.

பணமில்லாத சமுதாயமாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் லட்சியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்காகவே, ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாமல் ஆக்கினேன் என்று சொல்லியுள்ளார். கறுப்பு பண ஒழிப்புக்காகவே இந்த நடவடிக்கை என்று முதலில் கூறிய மோடி, தற்போது தனது உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டார். எனினும் அவர் வெளிப்படுத்தாத உண்மை ஒன்றும் இருக்கிறது. அது, டிஜிட்டல் பண பரிவர்த்தனையால், உண்மையில் யாருக்கு நன்மை?; சமூகத்தில் அது எத்தகைய நாசத்தை விளைவிக்கும் என்பதை பற்றியும்தான்..

பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற யோசனை இன்றோ, நேற்றோ தோன்றியதல்ல. பணத்தை ஒழித்து, அதை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்று சர்வதேச பெருவங்கி முதலாளிகள் கடந்த 45 ஆண்டுகளாக அதிதீவிரமாக இயங்கி வருகிறார்கள். அவர்கள், அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அமல்படுத்துவதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். அமெரிக்காவில் வெறும் 7 சதவீதமே நேரடிப் பணப்பரிவர்த்தனையாக நடக்கிறது. மீதியெல்லாம், ஆன்லைன் பண பரிவர்த்தனைதான்.

அங்கு, நேரடியாக பணம் கொடுத்து பரிவர்த்தனையில் ஈடுபடுவர்கள், சக மனிதர்களால் குற்றவாளிகளை போல் பார்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவில், சில குறிப்பிட்ட பொருட்களை பணம் கொடுத்து வாங்குவது கூட கிரிமினல் குற்றம். அந்தளவுக்கு வங்கி முதலாளிகள் கடுமையான பிரச்சாரம் செய்து, அமெரிக்கர்களையும், ஆட்சியாளர்களையும் மூளைச்சலவை செய்துள்ளனர்.

டென்மார்க் நாட்டை பொறுத்தவரை, பல்லாயிரக்கணக்கான ஏ.டி.எம்.,கள் மூடப்பட்டு, பணம் கையில் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும், அயர்லாந்தில், நேரடியாக பணம் எடுப்பதற்கு தனிக் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இப்படி, பல்வேறு நாடுகளில், மறைமுகமாக, டிஜிட்டல் பண பயன்பாட்டு முறைக்கு மாற பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அந்த செயல்திட்டத்தின் முக்கிய பகுதியாகவே, உலக மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையை கொண்ட இந்தியாவிலும், சாமானியர்களுக்கு எதிராக, டீமானிட்டைசேசன் என்ற போர் தொடங்கப்பட்டு உள்ளது.

வங்கிகளைப் போல் உலகின் மோசடிக் கூடம் வேறு எங்கும் இருக்கவே முடியாது. வட்டி மூலம் கோடிக்கணக்கானவர்களை கொன்றொழிக்கிற, சாத்தானிய நிறுவனங்கள் அவை. அடிக்கடி நிகழும் உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னணியில், இந்த சர்வதேச வங்கியாளர்களின் கைவரிசையே உள்ளது. இவர்கள், பணமில்லாத சமூகத்தை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளிலும் பாடுபட்டு வருகிறார்கள். மோடி போன்ற மலிவான ஆட்சியாளர்களை விலைக்கு வாங்க, சில ஆயிரம் கோடிகளை அவர்கள் செலவழிக்க தயங்குவதில்லை. இந்த வங்கியாளர்களின் பெரும்படை, கீழ்காணும் வழிமுறைகளில் தங்கள் பிரச்சாரத்தை நிறைவேற்றுகிறார்கள்

1) அவர்களது முதலாவது வாதம்: கடத்தல், கொலை, கொள்ளை போன்ற விஷயங்களை செய்யும் சமூகவிரோதிகள், பணத்தை மையப்படுத்தியே செயல்படுகிறார்கள். நேரடியாக பணம் இருந்தால்தானே இந்த பிரச்னை. எல்லாவற்றையுமே டிஜிட்டல் மயமாக மாற்றிவிட்டால், அத்தகைய சமூகவிரோதிகள் ஒழிந்துவிடுவார்களே என்று மக்களை நம்பவைப்பார்கள்.
2) கறுப்பு பணம், பதுக்கல் உள்ளிட்டவை எல்லாமே இந்த பணம் என்கிற ஒன்று இருப்பதால்தானே ஏற்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்துவிட்டால், அதை அரசே கண்காணிக்க முடியும் ; வரி ஏய்ப்பு செய்ய முடியாதல்லவா என்று அறிவுப்பூர்வமான(?) கேள்வியை அடுத்ததாக முன்வைப்பார்கள்.
3) பணம் அச்சிடுவதால், தாள், மை என்று பல்லாயிரம் கோடி ரூபாய் பணவிரயம் ஏற்படுகிறது; டிஜிட்டல் பணத்தில் அந்த தொல்லையே இல்லை என்பார்கள்.
3) அதிதீவிரமான விளம்பரம் மூலம் மக்களை மூளைச்சலவை செய்வார்கள். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த சிறப்புகளை விளக்கி கட்டுரைகளும், செய்திகளும் வெள்ளம் என வெளிவரும். டீக்கடைக்காரர் தொடங்கி, மீன்காரி, பூக்கடைக்காரி, மளிகைக்கடைக்கார அண்ணாச்சி போன்றோர், ‘எப்படி வெற்றிகரகமாக டிஜிட்டல் வணிகத்துக்கு மாறினோம்’ என்று பேட்டி கொடுப்பார்கள்.
4) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களே, வரி ஏய்ப்பு செய்யாதவர்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் என சித்தரிக்கப்படுவார்கள். முக்கியமாக, இளைஞர்கள் இந்த பிரச்சாரத்தில் குறிவைக்கப்படுவார்கள். ஆன்லைன் பரிவர்த்தனையின் போர்வீரர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என்று மோடி கூறியிருப்பதை, இங்கு பொருத்தி பார்க்க வேண்டும்.
5) இதன் பிறகு, ஒரு கட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எதிர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகள், தேசநலனுக்கு எதிரானவர்கள், எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் என்ற அளவுக்கு கருத்துருவாக்கத்தை செய்வார்கள்.
6) மக்களின் பயத்தோடும், உணர்ச்சிகளோடும் விளையாட, இந்த வங்கியாளர்கள் சற்றும் தயங்க மாட்டார்கள். பணத்தை திடீரென்று செல்லாது என அறிவித்து, அவர்கள் மனதில் தங்கள் சேமிப்பையும், பணத்தின் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் ஏற்படுத்தியது எல்லாம், இந்த டிஜிட்டல் பணமுறைக்கு மாறத்தூண்டும் ஒரு வழிமுறைதான். பணமதிப்பை இழக்க செய்த மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை மூலம், வங்கியில் பணம் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று எண்ணத்தை உருவாக்கும் முயற்சிதான்.


இப்படி செய்து, பெரும்பான்மையான சமூகத்தை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் இழுத்துவிடுவார்கள். எஞ்சியிருப்பவர்களும், நாளடைவில் அந்த மைய நீரோட்டத்தில் கலந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா?

டிஜிட்டல் பணத்தால், இவர்கள் சொல்வது போல் கறுப்பு பணமோ, வரி ஏய்ப்போ, ஊழலோ, கடத்தலோ, கொலை, கொள்ளையோ எதுவுமே குறையப்போவதில்லை. இதற்கு, பணம் ஒழிக்கப்பட்ட நாடுகளே சான்று. அடுத்ததாக, இன்றைய நிலையில் அதிகரித்துள்ள சைபர் திருட்டுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த மாதம் கூட, எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எப்.சி, எஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களில், 32 லட்சம் பேருடைய ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருடப்பட்டது நினைவிருக்கலாம். என்னதான் பலமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், வங்கிகளின் சர்வர்கள் ஒன்றும், சூரக்கோட்டை அல்ல. அவற்றை, உடைக்க, இணைய ஹேக்கர்களால் (இணைய திருடர்கள்) முடியும்.

http://gadgets.ndtv.com/internet/news/phishing-websites-stealing-information-from-26-indian-banks-claims-fireeye-1633197
இதேபோல், ஸ்வைப் மெஷின் தேவையில்லை, சாதாரண போன், ஸ்மார்ட்போன் மூலமே பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள். ஆனால், ஸ்மார்ட்போனில் உள்ள மைக், காமிரா, அனைத்தையும், வெளியில் இருந்து இலகுவாக கட்டுப்படுத்த முடியும் என்பது பலபேருக்கு தெரிவதில்லை. அவற்றை, நமக்கு தெரியாமலேயே, யாரோ ஒருவர், எங்கிருந்தோ இயக்க முடியும். இதை கருத்தில் கொண்டால், நிஜ பணத்தை விட டிஜிட்டல் பணமே பாதுகாப்பானது என்பது ஏற்புடையதல்ல.

  இதன் மூலம் வங்கியாளர்களுக்கு என்ன லாபம்?

கட்டுப்பாடு. ஏகபோக கட்டுப்பாடு. உலக மக்களின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதை சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும். நம்மால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, இந்த வங்கியாளர்கள் பெரும் லாபம் அடைவார்கள். இவர்களிடத்தில், கொஞ்சமும் நியாய உணர்வையோ, கருணையையோ எதிர்பார்க்கவே முடியாது. ஏற்கனவே, வங்கிகளில் டெபிட் கார்டு, வீட்டு லோன் போன்றவற்றை வாங்கி பாதிக்கப்பட்டவர்கள், வங்கியின் உண்மை முகத்தை அறிந்திருப்பார்கள். ஊழலில் திளைக்கும் இந்த வங்கிகளை நம்பித்தான், நம்முடைய ஒட்டுமொத்த சேமிப்பையும், உழைப்பையும் விட்டுவைக்க சொல்கிறார்கள்.




மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மாறினால், அவர்களின் அணு அணுவான ஒவ்வொரு நடவடிக்கையையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். அதாவது, நாளிதழ், மளிகை சாமான் என ஒவ்வொன்றுமே பதிவாகும். ஏற்கனவே, அமெரிக்க, இஸ்ரேலிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட பேஸ்புக், கூகுள் போன்றவை மூலம் மக்களின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதோடு, இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் வந்துவிட்டால் மக்களுக்கு அந்தரங்கம் என்கிற ஒன்றே இருக்காது. நம்முடைய ஒவ்வொரு நகர்வுமே பதிவு செய்யப்படும். நம்முடைய இந்த தகவல்களை, ஊழல்மிக்க அரசு, தனியார் நிறுவனங்கள், பத்திரமாக வைத்திருப்பார்கள்; அவற்றை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மாறாக, அந்த தகவல்களை வைத்து, எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ அப்படி பணம் ஈட்டுவார்கள். இன்னும், அரசு நினைத்தால், தங்களுக்கு எதிரானவர்களுடைய பணத்தை, இருந்த இடத்தில் இருந்தபடியே நொடிப் பொழுதில்  முடக்க முடியும். காரணம், டிஜிட்டல் பணம் என்பது வெறும் எண் விளையாட்டுதான்.


இப்படியாக நாளடைவில், பொருளாதார கட்டுப்பாடு அனைத்தையும் ஒருசிலரின் கைகளில் தங்கும். அதாவது, சுயேட்சைத்தன்மை நிறைந்த பொருளாதார உரிமையை மக்களிடம் இருந்து பறித்து, அதை அரசு கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஆரம்ப நிலைதான், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை. பொருளாதார சுதந்திரம் கைப்பற்றப்பட்டு விட்டால், மனிதனின் மற்ற சுதந்திரங்கள் ஒவ்வொன்றாக பறிக்க முடியும். ஆக, எளியவர்களையும், சிறுவியாபாரிகளையும் பாதிக்கும் நடவடிக்கை என்பதை தாண்டி, ஒட்டுமொத்த நாட்டையுமே பாதிக்கும் முடிவே, இந்த பணமற்ற சமூக சிந்தனை.

கொள்ளைக்கார மோடி அரசாங்கத்துக்கு, நாட்டு மக்களின் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லை; முழுக்க முழுக்க, மோடி தீய சக்திகளின் கைப்பாவையாகவே மாறிவிட்டார் என்பதற்கு இந்த பணமற்ற சமூகம் என்கிற கொள்கை முடிவு ஒரு உதாரணம். இதேநிலை நீடித்தால், மக்களின் எழுச்சி, விரைவில் மோடியையும், அவர் படைகளையும் வீட்டுக்கு அனுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

Comments

  1. அனைவருக்கும் மிகத் தேவையான தகவல். நல்ல கணிப்பு.

    ReplyDelete
  2. தெளிவான மாற்று சிந்தனைகொண்ட பதிவு

    ReplyDelete
  3. அரசு நினைத்தால், தங்களுக்கு எதிரானவர்களுடைய பணத்தை, இருந்த இடத்தில் இருந்தபடியே நொடிப் பொழுதில் முடக்க முடியும். காரணம், டிஜிட்டல் பணம் என்பது வெறும் எண் விளையாட்டுதான்.

    ReplyDelete
  4. இதெல்லாம் இந்த மாட்டு மூத்திரம் குடிக்கும்! முட்டாள் ஜால்ராக்களுக்கு எப்படி விளங்கும்... மக்களை கொத்தடிமைகளாக மாற்ற "கள்ள"அரசின் கபட நாடகமே இந்த "கருப்பு பண" அழிப்பு......
    அதுக்கும் பல மரமண்டைகள் என்னமா மோடியநக்கி பாராட்னாங்க..
    A fool government make people as fool...

    ReplyDelete
  5. இறுதிவரை மாற்று ஆலோசனையைத் தேடினேன்.

    தீர்வு என்ன, எதிர்கொள்வதற்கான மாற்று வழிமுறை என்ன என்பதும் சேர்க்கப்பட்டால் நன்று

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தூக்கம் கலைத்த பிக்பாஸ் ; உடலும் உள்ளமும் நலம்தானா?