Posts

தூக்கம் கலைத்த பிக்பாஸ் ; உடலும் உள்ளமும் நலம்தானா?

என் தோழி ரகசியமாக அழைத்து, என்னிடம் கேட்டார், ‘ நம் அலுவலகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை வைத்து, யாரையாவது வெளியேற்ற சொன்னால், யாரை வெளியேற்றுவாய்’ என்றார். ‘உங்களுக்கு யாரையாவது வெளியேற்றும் எண்ணம் உண்டா’ என்று அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டேன். கொஞ்சமும் தயங்காமல், ‘ஆமாம், நான்கு பேரை வெளியேற்ற மனதில் தீர்மானித்து வைத்திருக்கிறேன்’ என்று கொஞ்சமும் சலமின்றி முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்புடன் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி, எப்படியான உளவியல் தாக்குதலை நம்மை சுற்றியிருப்பவர்களிடம் நிகழ்த்தியிருக்கிறது என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் இது. நான்கு பேரை தன் பணிக்குழுவிலிருந்து வெளியேற்றுவதோடு மட்டும் நிற்கவில்லை அவர் கற்பனை. தன் அலுவலகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினால், 100 நாட்களும் எப்படியிருக்கும் என்பது வரைக்கும் கூட அவர் யோசித்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது அதிர்ந்தே போனேன். இவரை மட்டும் குற்றம் சொல்வதிற்கில்லை. பல தமிழர்களின் ஆழமனதில் உறங்கிக்கொண்டிருந்த பிக்பாஸ் மிருகம் தற்போது தட்டியெழுப்பப் பட்டிருக்கிறான். ஒவ்வொருவரும் தங்களுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை மனதில் ஓட்ட

‘ பணமற்ற பொருளாதாரம் ’ என்ற மோடியின் மோசடி

Image
1968ல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், கணித துறை இயக்குனராக இருந்தவர், பேராசிரியர் பால் ஆர்மர். அவருடைய காலத்தில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை கிடையாது. அது பற்றிய கருத்துகள் அப்போதுதான் தோன்ற ஆரம்பித்திருந்தன. கணிதத்துறையை சேர்ந்தவர் என்பதற்காக பால் ஆர்மர் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, கடுமையாக எதிர்த்தார். காரணம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் ஏற்படப்போகிற ஆபத்துகளை, முன்கூட்டியே கணித்தார். நேரடி பண பரிவர்த்தனையை ஒழித்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மக்கள் மாறினால், ‘மனித அந்தரங்கம்’ என்ற ஒரு விஷயமே இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்தார். அவருடைய இறுதிக்காலம் வரை, பணமற்ற சமூகம் என்கிற கருத்தை எதிர்த்து போராடி வந்தார்.  பேராசிரியர் பால் ஆர்மரின் எச்சரிக்கையும் கணிப்பும் தற்போது உண்மையாகி உள்ளது. பணமில்லாத சமுதாயமாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் லட்சியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்காகவே, ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாமல் ஆக்கினேன் என்று சொல்லியுள்ளார். கறுப்பு பண ஒழிப்புக்காகவே இந்த நடவடிக்கை என்று முதலில் கூறிய மோடி, தற்போது தனது உண்மையான நோக்