Posts

Showing posts from November, 2016

‘ பணமற்ற பொருளாதாரம் ’ என்ற மோடியின் மோசடி

Image
1968ல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், கணித துறை இயக்குனராக இருந்தவர், பேராசிரியர் பால் ஆர்மர். அவருடைய காலத்தில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை கிடையாது. அது பற்றிய கருத்துகள் அப்போதுதான் தோன்ற ஆரம்பித்திருந்தன. கணிதத்துறையை சேர்ந்தவர் என்பதற்காக பால் ஆர்மர் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, கடுமையாக எதிர்த்தார். காரணம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் ஏற்படப்போகிற ஆபத்துகளை, முன்கூட்டியே கணித்தார். நேரடி பண பரிவர்த்தனையை ஒழித்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மக்கள் மாறினால், ‘மனித அந்தரங்கம்’ என்ற ஒரு விஷயமே இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்தார். அவருடைய இறுதிக்காலம் வரை, பணமற்ற சமூகம் என்கிற கருத்தை எதிர்த்து போராடி வந்தார்.  பேராசிரியர் பால் ஆர்மரின் எச்சரிக்கையும் கணிப்பும் தற்போது உண்மையாகி உள்ளது. பணமில்லாத சமுதாயமாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் லட்சியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்காகவே, ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாமல் ஆக்கினேன் என்று சொல்லியுள்ளார். கறுப்பு பண ஒழிப்புக்காகவே இந்த நடவடிக்கை என்று முதலில் கூறிய மோடி, தற்போது தனது உண்மையான நோக்